Skip to main content

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சகல வீதிகளையும் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சகல வீதிகளையும் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக சகல வீதிகளையும் உரிய தகவல்களுடன் அளவை செய்யும் நடவடிக்கையானது இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிள அளவையியல் பாடநெறி கற்கை மாணவர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள சோலைவரி அறவீட்டுக்கான அனுமதி நடவடிக்கையின் ஆரம்ப பணிகள் முடிவடைந்துள்ளதை அடுத்து அதனை முறையாக அமுல்படுத்துவதற்கும், இப்பிரதேச வீதி அபிவிருத்தி விடயங்களை முறையாக இற்றைப்படுத்துவதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை குறித்த மாணவர்களூடாக விரைவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பணிக்காக தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிள அளவையியல் பாடநெறி கற்கை மாணவர்களுக்கு எமது கோறளைப்பற்று பிரதேச சபையின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.