கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்களுக்கான அன்பார்ந்த வேண்டுகோள்...!
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எமது சபையால் முன்னெடுக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத்துக்கே உரித்தான சேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மேம்படுத்தல் ஆலோசனைகள், கோரிக்கைகள் மற்றும், புதிய விடயங்கள் குறித்து நேரடியாக எமது அலுவலகத்திற்கு சமூகமளித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்திலோ அல்லது செயலாளர் கோறளைப்பற்று பிரதேச சபை வாழைச்சேனை எனும் முகவரிக்கோ அல்லது Koralaipattups@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது 074-3883938 எனும் அலுவலக WhatsApp இலக்கத்திற்கோ அல்லது எமது அலுவலக முகநூல் பக்கத்தின் குறும் தகவல் பெட்டியின் ஊடாகவோ எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும். அவ்வாறு முன்வைக்கப்படும் தங்களது கோரிக்கைகள், முறைப்பாடுகளில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவை உறுதி செய்யப்பட்டிருப்பின் தங்களது கோரிக்கைகள் மற்றும், முறைப்பாடுகளை எம்மால் இயன்றளவு சீர்செய்வதற்கு சட்ட ரீதியான ஆவணமாக அமையும் என்பதுடன் அவ்வாறான தங்களது பெறுமதிமிக்க ஆலோசனைகள், கருத்துக்கள் எம்மால் வரவேற்கப்படுகின்றது என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாறாக உரிய தேவைப்பாடுகளை உரிய நிறுவனத்திடம் முறையாக தெரிவிக்காமல் முகநூல்கள் ஊடாக பதிவிடுவதாலோ அல்லது, சமூக நலன் விரும்பிகள் எனும் போர்வையில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி விடயங்களை விமர்சித்து தடையேற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் சமூக விரோதிகளிடம் முன்வைப்பதாலோ எந்தவகையிலும் அதனை உங்களால் செயல்வடிவமாக்க முடியாது என்பதை உணர்ந்து தயவு செய்து கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அன்பார்ந்த பொதுமக்களே உங்களால் எதிர்ப்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்ற சேவைகளை மேலே குறிப்பிடப்பட்டுள்ள எமது தொடர்பாடல் வழிமுறையின் ஊடாக எமக்கு தெரிவியுங்கள்.