Skip to main content

உள்ளூராட்சி மன்றத்தின் சேவையினை மேம்படுத்துதல் தொடர்பாக பயனாளிகளுடனான நேரடிக் கலந்துரையாடல்

எமது சபையால் முன்மொழியப்பட்டு FSLGA வேலைத்திட்டத்தின் ஊடாக அமுல்படுத்தப்படவுள்ள வாழைச்சேனை பொதுமைதானத்தை அண்மித்த பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு வருகின்ற பிரயாணிகளின் பலவேறுபட்ட அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துவதனூடாக பாலின சமத்துவம் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் சேவையினை மேம்படுத்துதல் தொடர்பாக பயனாளிகளுடனான நேரடிக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

அமுல்படுத்தப்படவுள்ள இத் திட்டம் தொடர்பில் உள்வாங்கப்படவேண்டிய வசதிகளை வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர், பாலூட்டும் தாய்மார், முதியோர்கள் மற்றும், போக்குவரத்து நேரக்காப்பாளர் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை தகவல்களாக திரட்டப்பட்டன.

எனவே இத்திட்டத்தினை மேலும் பெறுமதி மிக்கதாக அமுல்படுத்தும் வகையில் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை நேரடியாக எமது அலுவலகத்திற்கு சமூகமளித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்திலோ அல்லது Koralaipattups@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது 074-3883938 எனும் அலுவலக WhatsApp இலக்கத்திற்கோ அல்லது எமது அலுவலக முகநூல் பக்கத்தின் குறும் தகவல் பெட்டியின் ஊடாகவோ எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும். அவ்வாறு முன்வைக்கப்படும் தங்களது கருத்துக்கள் மற்றும், ஆலோசனைகளில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவை உறுதி செய்யப்பட்டிருப்பின் அவை சட்ட ரீதியான ஆவணமாக்கிகொள்ள முடிவதுடன், அவ்வாறான தங்களது பெறுமதிக்க ஆலோசனைகள், கருத்துக்கள் எம்மால் வரவேற்கப்படுகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.