கோறளை பற்று பிரதேச சபை வாழைச்சேனை எல்லைக்குட்பட்ட காணி உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்
2023.08.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2345ஆம் இலக்க வர்த்தமானி பத்திரிகை மூலம் மட்டக்களப்புமாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சின்னராசா பிரகாஸ் அவர்களினால் எமது சபை எல்லைக் குட்பட்ட பல பகுதிகள் அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளும் நில அளவை செய்யப்பட்டு வரைபடத்துடன் அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நில அளவை செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தங்களது காணிகளுக்கான ஆதன இலக்கம் வழங்கப்பட்டு நிரந்தர முகவரி சட்டரீதியாக வழங்குவதற்கு எமது சபை உத்தியோகத்தர்கள் தங்களது காலடிகளுக்கு வருகை தரவுள்ளார்கள்.
எமது சபையினால் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் உறுதி பத்திரத்தின் போட்டோ பிரதி மற்றும் ஆள்அடையள அட்டையின் பிரதி என்பவற்றினை இணைத்து மீள வரும்எமதுசபைஉத்தியோகத்தர்களிடம்ஒப்படைக்குமாறுஅன்புடன்கேட்டுக்கொள்கின்றேன்.
மேலதிக விபரங்களுக்கு ஹ. மு. நியாஸ் ( வருமான பரிசோதகர்)077- 5392419.
" நன்றி"
ச. நவநீதன்
செயலாளர்
கோறளை பற்று பிரதேச சபை
வாழைச்சேனை.