33 வருடங்களாக மூடப்பட்டிருந்த பழைமை வாய்ந்த பாசிக்குடா முனை முருகன் கோயில் வீதி கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளரது முயற்சியால் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு.
கடந்த யுத்த காலத்தின் போது (1990 ஆம் ஆண்டு) மூடப்பட்டு, மக்களது பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த பாசிக்குடா முனை முருகன் கோயிலுக்கான பழைமை வாய்ந்த வீதியானது கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சண்முகநாதன் நவநீதன் அவர்களது முயற்சியால் மீண்டும் இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டத்துடன், பாவனையின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட குறித்த வீதியை பயன்பாட்டுக்கேற்ற வகையில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களது பங்களிப்புடன் சபையின் உழவு இயந்திரங்கள் மற்றும்,JCB இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டு தற்காலிகமாக சீர் செய்யப்பட்டுள்ளது.
பாசிக்குடா சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான பிரதேச சபையின் பங்களிப்பின் அடிப்படையில் கடந்த ஓரிரு மாதங்களாக பல்வேறு மேம்படுத்தல் திட்டங்கள் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் முக்கிய விடயமாக இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை கவிஜயம் செய்யப்பட்டு, இன்று (25.07.2023) இவவீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.