பாசிக்குடா சுற்றுலா துறை அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்
பாசிக்குடா பகுதியின் சுற்றுலா துறை மேம்பாடு குறித்த தற்போதைய மற்றும், எதிர்கால திட்டங்களை அமுல்ப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலானது இன்றைய தினம் (09.08.2023) கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திரவிடுதியில் இடம்பெற்றது. இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் நடாத்தப்பட்ட இவ் கலந்துரையாடலில் கோறளைப்பற்று சபையின் செயலாளர் திரு.சண்முகநாதன் நவநீதன், சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.T. அருள்செல்வன் ஆகியோருடன் பாசிக்குடா பகுதியின் சுற்றுலா விடுதிகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஜனாப். M.H.Mமாஹிர், பாசிக்குடா சுற்றுலா பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் அகியோரும் கலந்துகொண்டனர்.
இதன் போது இதுவரை பாசிக்குடா பகுதியின் சுற்றுலா துறை மேம்பாடு தொடர்பாக கோறளைப்பற்று பிரதேச சபையினால் அமுல்படுத்துவதற்கு தடையாக இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகள் திட்ட முன்மொழிவுகளாக சபையின் செயலாளர் மற்றும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் மூலம் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை விரைவில் செயற்படுத்துவது குறித்த விசேட கவனம் செலுத்தப்பட்டு, படிப்படியாக அவற்றை அமுல்ப்படுத்துவதற்கான ஆரம்ப அனுமதிகள் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.