"வாழைச்சேனை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல்" திட்டம் மற்றும், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆகியவற்றுக்காக வாயோதிபர்களின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல்.
FSLGA திட்டத்தின் ஊடாக கோறளைப்பற்று பிரதேச சபையால் முன்னெடுக்கப்படவுள்ள "வாழைச்சேனை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல்" திட்டத்திற்காக குறித்த பேருந்து தரிப்பிடத்தை பயன்படுத்தக்கூடிய பலத்தரப்பட்ட பயனாளிகளதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதுடன், எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை தயாரித்தல் குறித்த ஆலோசனை பெறல் என்பவற்றில் கவனம் செலுத்தி குறித்த விடயங்களை பயனுறுதி மிக்கதாகவும், பெருமதி மிக்கதாகவும் அமுல்படுத்தும் வகையில் ஆலோசனை கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றைய தினம் வயோதிபர்களுடனான கலந்துரையாடல் எமது அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் S.நவநீதன் அவர்களது வழிகாட்டுதல்களுடன் இடபெற்ற இக்கலந்துரையாடலில் முதியோர் அமைப்பின் தலைவர் உட்பட அதிகளவான வயோத்திபர்கள் கலந்து கொண்டதுடன், சபையின் நிதி உதவியாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏற்கனவே இவை தொடர்பாக நேற்றைய முன்தினம் மாற்றுத்திறனாளிகளுடனும், நேற்றைய தினம் மகளிர் அமைப்பின் பிரிநிதிகளுடனுமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.