குடும்பிமலை கிராம மக்களின் தேவைகளை அமுல்ப்படுத்துதல்
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட குடும்பிமலை பகுதி மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் குடும்பிமலை கிராமத்துக்கான நேரடி விஜயம் முன்னெடுக்கப்பட்டத்துடன், சமூக மட்ட அமைப்பினருடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு அவர்களது சிறிய அளவிலான பின்வரும் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பாட்டுள்ளது.
01. USAID நிறுவனத்தால் குடும்பிமலை கிராமத்தில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள குடிநீர்த்திட்டத்தின் மாதாந்த மின் கட்டணத்தை பிரதேச சபை பொறுப்பேற்றல்.
02. மயிலத்தனை, மியான்கல் குளம் வீதிகளை சிறிய அளவில் செப்பனிடல்.
03. அப்பகுதிக்கான பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்படும் பற்றைக்காடுளை அகற்றி அச்சமின்றிய போக்குவரத்துக்கு ஏற்ப சீர்செய்தல்.
04. வீதிகளுக்கு தெருவிளக்குகள் பொருத்துதல்.
மேற்படி கோரிக்கைகளை விரைவில் செயற்படுத்துவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகள் குறித்து சபையின் செயலாளர் S.நவநீதன் அவர்களால் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.